by Staff Writer 30-12-2018 | 8:20 AM
Colombo (News 1st) நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் அண்மித்த பகுதிகளில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சூழலை துப்பரவு செய்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என கல்வி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகள், உள்ளிட்ட கற்கை நிறுவனங்கள் மற்றும் வலயக்கல்விப் பணிமனைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பெற்றோர் உள்ளிட்டோரும் கலந்துகொள்வது அவசியம் என சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப்பிரிவின் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.