பழைய நினைவுக்கல்லை மீண்டும் பொருத்தும் நடவடிக்கை

இரணைமடுக் குளத்தில் காணப்பட்ட பழைய நினைவுக்கல்லை மீண்டும் பொருத்தும் நடவடிக்கை

by Staff Writer 10-12-2018 | 8:41 PM
Colombo (News 1st) இரணைமடுக் குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருந்த வேளை, அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில், குறித்த நினைவுக் கல் அமைந்திருந்த பகுதியும் அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவுக் கல்லையும் புதிய நினைவுக் கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் புதிய நினைவுக் கல் பொருத்தப்பட்டது. இதேவேளை, பழைய நினைவுக் கல்லை மீண்டும் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.