by Staff Writer 06-12-2018 | 9:09 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா B. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு ஏற்ப தற்போதைய பிரச்சினையை மிக விரைவில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் தீர்க்க வேண்டும் என டெய்லி FT செய்திக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் தமக்கு சார்பான எவரும் இல்லை எனவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மதிக்கும் சட்டப்பூர்வமான அரசாங்கம் உருவாவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.