மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக ஆட்சிக்கு வரவில்லை: மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 30-11-2018 | 8:34 PM
Colombo (News 1st) அதிக சுமையை ஏற்படுத்தி மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை என்றும் மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கே இணைந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவற்றின் பிரகாரமே செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் மக்களின் விரும்பம் இன்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அபகரிக்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார். 7000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

ஏனைய செய்திகள்