by Bella Dalima 20-11-2018 | 6:00 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் தொடரும் மழையுடனான வானிலையால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.
இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 32 அடியாக உயர்வடைந்துள்ளது.