by Bella Dalima 14-11-2018 | 4:29 PM
Colombo (News 1st) புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கும் வரையில், தற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை அறிவித்தார்.
மகிந்த சமரசிங்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு இணங்கவே நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் மகிந்த சமரசிங்க இதன்போது கூறினார்.
சட்டத்திற்கு மாறான எந்தவொரு செயற்பாட்டையும் ஜனாதிபதி தவிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சபாநாயகரின் கடிதம் கிடைத்தவுடன், ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு இணங்க எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.