தலிபான்களின் தந்தை என அறியப்பட்ட மௌலானா கொலை

தலிபான்களின் தந்தை என அறியப்பட்ட மௌலானா கொலை

by Chandrasekaram Chandravadani 03-11-2018 | 11:39 AM
தலிபான்களின் தந்தை என அறியப்படும் மௌலானா சமி உல் ஹக் (Maulana Sami ul-Haq) என்பவர், பாகிஸ்தானின் ரவால்பின்டி (Rawalpindi) நகரில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். மௌலானா கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக உள்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ள போதிலும், அவர் துப்பாக்கிச் சூட்டினால் தான் பலியாகியுள்ளதாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. மௌலானா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் பலவிதமான குழப்பங்கள் காணப்படுகின்ற நிலையில், அவர் கத்தியால் பல தடவைகள் குத்தப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக மௌலானாவின் மகன் கூறியுள்ளார். இந்தநிலையில், இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தனது மாமாவின் உடலில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக மௌலானாவின் மருமகன் தெரிவித்துள்ளார். அதேநேரம், நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.