by Staff Writer 03-11-2018 | 6:56 PM
மிகச்சிறந்த அரச சேவையாளரை கண்டறியும் இன்டர்கிரிட்டி ஐடல் விருது வழங்கல் விழாவில், தம்புத்தேகம வலயக்கல்விப் பணிப்பாளர் கருணாரத்ன பண்டார சிறந்த அரச சேவையாளராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மாற்றத்தினை ஏற்படுத்துபவர்களை வலுவூட்டி, வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்கும் பொறுப்புவாய்ந்த தலைவர்களை உலகெங்கும் அதிகரிக்கும் நோக்கில் இன்டெக்கிறிட்டி idol விருது வழங்கல்விழா நடாத்தப்படுகின்றது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் கோரப்பட்டிருந்தன.
தமது தனிப்பட்ட வாழ்விலும் தொழில்சார் துறையிலும் தமது நேர்மையை நிரூபிக்கும் பொது அதிகாரிகளின் பெயர்களை இந்த விருதுக்கு பரிந்துரைக்குமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்து.
கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளுக்கிணங்க விருதுக்கு உரியவர் 5 பேரைக்கொண்ட நடுவர் குழாமினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, தம்புத்தேகம வலய கல்விப்பணிப்பாளர் கருணாரத்ன பண்டார இந்த வருடத்தின் சிறந்த அரச சேவையாளராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.