நைஜீரிய வன்முறைச் சம்பவத்தில் 55 பேர் பலி

நைஜீரிய வன்முறைச் சம்பவத்தில் 55 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 21-10-2018 | 7:27 AM
நைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளதாக ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார். கஸுவான் மாகனி நகரில், பாரம் தூக்குபவர்கள் இடையே, இரு குழுக்களிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாநிலத்தின் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானதொரு விடயமாகும். இந்தநிலையில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நல்லிணக்கம் இல்லாது, எமது அன்றாட வர்த்தகத்தை அடைய முடியாது என ஜனாதிபதி முஹம்மது புஹாரி குறிப்பிட்டுள்ளார்.