by Bella Dalima 19-10-2018 | 10:44 PM
Colombo (News 1st) வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவித்து வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் 12 முதல் 1 மணி வரை கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக
நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டிய நிதி இன்னும் மாகாண சபைக்கு ஒதுக்கப்படாமையால் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க முடியவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்
எவ்வாறாயினும், மேலதிகக் கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி இந்த மாத இறுதியில் ஒதுக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.