by Staff Writer 16-10-2018 | 8:56 PM
Colombo (News 1st) வீதி விபத்துக்களினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,368 பேர் உயிரிழந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கிய 778 பேர் அடங்குவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் 722 பேர் அடங்குகின்றனர்.
கடந்த 7 வருடங்களில் வீதி விபத்துக்களில் சிக்கிய 18,491 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்களை தவிர்த்துக்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தொடர்பிலும் பிரதியமைச்சர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.