ஹற்றன் - பலாங்கொடை பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வேலிகம பகுதியில் மண்சரிவினால் நான்கு வீடுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குள் சங்கமம் ( EXCLUSIVE VIDEO)

by Staff Writer 15-10-2018 | 4:27 PM

ஹற்றன் - பலாங்கொடை பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வேலிகம பகுதியில் மண்சரிவினால் 4 வீடுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குள் சரிந்து வீழ்ந்துள்ளன.

ஹற்றனிலிருந்து நோர்வூட் - பொகவந்தலாவை , பலாங்கொடை, சாமிமலை மஸ்கெலியா நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதை இதனால் மூடப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் ஒரு புறத்தால் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள், மக்கள் மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான மலைப்பகுதிகளூடாக சென்று அடுத்த புறத்தில் இருக்கும் வாகனங்களில் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிலிருந்து பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையினால் வாகன போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதேவேளை, மாற்றுவழிப்பாதைகளூடாக செல்லும் வாகனங்கள் 50 கி.மீ. தூரம் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹற்றன் - பலாங்கொடை பிரதான வீதி நோ்ரவூட் நிவ்வேலிகம பகுதியில் தாழிறங்கியுள்ளதுடன் 4 வீடுகளும் சரிந்து வீழ்ந்துள்ளன. அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த வீடுகளில் இருந்த 5 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.