மக்களை உயர்வான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரல்

மைக்கல் சூறாவளி: மக்களை உயர்வான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 10-10-2018 | 2:19 PM
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மைக்கல் சூறாவளி வலுவடையும் என்பதால், 3,70,000க்கும் மேற்பட்டோர் உயர்வான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மைக்கல் சூறாவளியானது வகை 3 ஐ சேர்ந்த சூறாவளியாக நேற்றிரவு மாற்றமடைந்துள்ளது. இதனால், புளோரிடாவில் 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசிவருவதுடன், இன்று நள்ளிரவிற்குள் மேலும் வலுவடையும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதில் சுமார் 20 பிரதேசங்கள் தாக்கப்படும் அபாயமுள்ளதால், 3,70,000க்கும் மேற்பட்டோர் உயர்வான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, புளோரிடாவில் அவசரகா​லநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அமெரிக்காவின் ஹொண்டுராஸ் பகுதியில் மைக்கல் புயல் காரணமாக 13 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், மைக்கேல் சூறாவளி காரணமாக புளோரிடா மக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறு அப்பகுதி மேயர் அறிவித்துள்ளார். இதனிடையே, நாளை மறுதினம் மைக்கல் சூறாவளி அத்திலாந்திக் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.