செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-10-2018 | 5:47 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் பல சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 02. நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். 03. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்துள்ளது. 04. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம், தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 05. இலங்கை - சீஷெல்ஸ் இடையே, தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தொழில் பயிற்சித்துறை தொடர்பான இரண்டு இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாதிடப்பட்டன. வௌிநாட்டுச் செய்திகள் 01. பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 02. மெக்ஸிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மீது பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது.