திருகோணமலையில் யுனெஸ்கோ மாநாடு 

தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான 7 ஆவது யுனெஸ்கோ சர்வதேச மாநாடு திருகோணமலையில் ஆரம்பம்

by Staff Writer 09-10-2018 | 8:43 PM
Colombo (News 1st) தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான 7 ஆவது யுனெஸ்கோ சர்வதேச மாநாடு திருகோணமலையில் இன்று ஆரம்பமானது. தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான யுனெஸ்கோ சர்வதேச மாநாடு, தெற்காசிய நாடொன்றில் நடைபெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் மாநாடு இன்று ஆரம்பமானது. 21 நாடுகளின் தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தேசிய தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சு ஆகியன இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. ஏனைய நாடுகளின் தொழில் அனுபவம் மற்றும் திறன்களை பரிமாற்றுதல் தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டின் நோக்கமாகவுள்ளது.