by Staff Writer 07-10-2018 | 10:24 AM
Colombo (News 1st) வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி செய்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உணவகங்களுக்கு ஆரோக்கியமான மரக்கறிகளை விநியோகிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆரோக்கியமான மரக்கறிகள் தொடர்பில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கேள்வி நிலவுவதாகவும் விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.