வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-10-2018 | 6:29 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புத்தளம் – அருவைக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அறிக்கை நிராகரிக்கப்பட்டமையால், சேரக்குழி பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று (05) தெரிவித்தார். 02. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (05) உத்தரவிடப்பட்டுள்ளது. 03. தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகம், 6 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 04. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (05) வௌியிடப்பட்டன. அதேநேரம், தரம் 5 பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளியும் வௌியாகியுள்ளது. இந்தநிலையில், இந்த வருடம் முதல் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 05. முல்லைத்தீவில் உதா கம்மான வீடமைப்புத் திட்டம் பயனாளிகளிடம் நேற்று (05) கையளிக்கப்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. 2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 02. தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங் பக்-இற்கு (Lee Myung-bak) 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.