by Staff Writer 30-09-2018 | 1:03 PM
ஜா - எல வெலிகம்பிட்டிய பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேறு ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்த பெண் சிக்கியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
காரில் வருகை தந்த இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தருள்ளதுடன், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜா-எல வெலிகுருந்துவத்த பகுதியை சேர்ந்த 40 வயதானபெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காரி பயணித்துக் கொண்டிருக்கையில் அவர் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
மண் வியாபாரம் தொடர்பான முரண்பாடே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெறும்போது, குறித்த பெண்ணுடன் அவரது எட்டு வயது மகளும் இருந்துள்ளதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பு கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.