வானிலை : இன்றிரவு 100 மி.மீ. வரை மழைவீழ்ச்சி

வானிலை : இன்றிரவு பல பகுதிகளில் 100 மி.மீ. வரை மழைவீழ்ச்சி

by Staff Writer 24-09-2018 | 5:28 PM

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றர் வரையிலான அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும். கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.