by Staff Writer 24-09-2018 | 5:14 PM
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளி கடற்கரையிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், மாலை வரை வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தாரும் அயலவர்களும் தேடிய நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.