வேறு நாடுகளால் நம்மை நிர்வகிக்க முடியாது - மஹிந்த

வேறு நாடுகளால் நம்மை நிர்வகிக்க முடியாது - மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 22-09-2018 | 1:31 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஸ குடும்பத்தின் எந்த உறுப்பினரை நிறுத்துவதற்கு இந்தியா விரும்புகிறது என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, வேறு நாடுகளால் தம்மை நிர்வகிக்க முடியாது எனவும் இலங்கையைத் தவிர வேறு தரப்பினரை நம்பவில்லை எனவும் முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நீங்கள் சென்றபோது உங்களின் சகோதரர்களில் ஒருவர் என கூறினீர்களே?
இல்லை. இல்லை. எங்களை நிர்வகிப்பது வேறு நாடுகள் அல்ல. எமது நாடே நிர்வகின்றது. இலங்கையைத் தவிரந்த வேறு நாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு இலங்கை மட்டுமே, ஏனையை நாடுகளை வளப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. இதுதான் எமது கொள்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய அரசாங்கத்தைப் போல எங்களை மதிப்பிட வேண்டாம் . நாங்கள் வௌிநாட்டவர்களின் தேவைக்கேற்றவாறு நடப்பவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.