Colombo (News 1st) 2019 ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (20) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இலங்கை அணிக்கு வென்று கொடுத்த அர்ஜுன ரணதுங்க 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான சந்திக்க ஹதுருசிங்க, அணி வீரர்கள், 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் அணியில் இடம்பெற்ற வீரர்கள் என பலரும் இதன்போது இணைந்துகொண்டனர்.
வெற்றிக்கிண்ணம் இன்று மாலை காலி முகத்திடலில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.