பால் மா விலை குறைப்பு

பால் மா விலை குறைப்பு: சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 18-09-2018 | 9:24 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்க வாழ்க்கைச்செலவுக் குழு தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலையைக் கவனத்திற்கொண்டு இன்று மாலை கூடிய வாழ்க்கைச்செலவுக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து இன்று பரிசீலித்ததாக வாழ்க்கைச்செலவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார். அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.