by Staff Writer 16-09-2018 | 2:36 PM
Colombo (News 1st) இராகலை - சென்லெனாட் மேற்பிரிவு வனப்பகுதியிலுள்ள குகைக்குள் இருந்து சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்திருந்த இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இராகலை - சென்லெனாட் தோட்டத்தை சேர்ந்த 29 வயதான இளைஞரினதும் மெதவத்த பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞரினதும் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகைக்குள், அவர்களுடன் சென்ற நாயும் உயிரிழந்துள்ளமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முள்ளம்பன்றியொன்றை வேட்டையாடச் சென்ற குறித்த இருவரும், குகைக்குள் புகை விசிறியதன் பின்னர் உட்பிரவேசித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.