மரமுந்திரிகை விநியோகம் உள்நாட்டு உற்பத்தியாளருக்கு

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கான மரமுந்திரிகை விநியோகத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்க தீர்மானம்

by Staff Writer 12-09-2018 | 5:54 PM
Colombo (News 1st)  ஶ்ரீலங்கன் விமான சேவைக்கான மரமுந்திரிகை விநியோகத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தௌிவூட்டியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கு முன்னர் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் மரமுந்திரிகை கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், தேவையை நிறைவு செய்யும் வகையில் மரமுந்திரிகை விநியோகத்தை முன்னெடுக்க முடியாது போனமையால் வௌிநாட்டு விநியோகத்தர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விலைமனு கோரலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் தற்போது கலந்துரையாடி ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.