by Staff Writer 05-09-2018 | 7:06 PM
Colombo (News 1st) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்தப் பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த பகுதியை சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்த சுமார் 9,098 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.
இதன் பிரகாரம், தொழிற்சாலையை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.