by Staff Writer 03-09-2018 | 4:49 PM
கவனயீனமாக செயற்பட்டு விபத்தை ஏற்படுத்தும் ரயில் சாரதிகளுககு எதிராக குற்றவியல் வழக்கு தாக்குல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் ரயில்வே பொது முகாமையாளருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதேவேளை, ரயில் மார்க்கங்களில் கைவிடப்பட்டிருக்கும் பழைய இரும்பு தண்டவாளங்கள் மற்றும் ஏனைய உருக்கு பொருட்களை விலைமனுக்கோரலினூடாக விற்பனை செய்து, ரயில்வே திணைக்களத்திற்கு அதனூடாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளுமாறும் போக்குவரத்து அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.