Colombo (News 1st) நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் Enterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்.
மொனராகலையில் இந்த கண்காட்சி கடந்த 29 ஆம் திகதி முதல் இடம்பெற்று வந்தது.
ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான மஹிந்த அமரவீர, வஜிர அபேவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோர் இன்று கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையை தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படும் நிலையான அபிவிருத்தி என்பன கண்காட்சியின் நோக்கமாக அமைந்தது.
12 வலயங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில் 515 அரச மற்றும் தனியார் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களிலுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி ஆகியனவும் இங்கு வழங்கப்பட்டன.