by Bella Dalima 23-08-2018 | 10:42 PM
Colombo (News 1st) சுதந்திர ஊடகவியலாளர் என்ற முத்திரையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளை மாத்திரமல்லாது, வேறு நபர்களையும் இலக்கு வைத்து தொடர்ச்சியாக சேறு பூசும் இணையத்தளத்தினை நடத்தும் ஒருவர் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் வௌிப்படுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பிரபலமான ஒரு சிலரினால் அரசாங்கத்தின் ஏனையவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவற்காக இந்த நபருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள மூவருக்கு குறித்த இணையத்தளத்துடன் தொடர்புள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்துருவன் சேனாதீர என்ற நபர் லண்டனிலிருந்து கொண்டு இணைய மாஃபியாவை உருவாக்கி, அதனூடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு களங்கள் ஏற்படுத்தும் செயல்களை மேற்கொள்வதாக ரஞ்சித் சொய்சா சுட்டிக்காட்டினார்.
அதற்காக 25,000 ஸ்டேர்லிங் பவுன்ட்ஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதே நோக்கம் எனவும் ரஞ்சித் சொய்சா மேலும் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களை காணொளியில் காண்க...