தலைமன்னார் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் ரயில் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Bella Dalima 16-08-2018 | 5:48 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான ரயில் சேவையை நாளை (17) முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரிலிருந்து கொழும்பிற்கும் நாளாந்தம் நான்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரயில் சேவை மட்டுப்படுத்தப்படுவதால், தலைமன்னாருக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.