புத்தளத்தில் அதிகரிக்கும் கடற்கரைக் கழிவுகள்

புத்தளத்தில் அதிகரிக்கும் கடற்கரைக் கழிவுகள்

by Staff Writer 13-08-2018 | 4:13 PM

Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தின் கடற்கரைகளில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு தொடக்கம் - தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீற்றர் வரையான கடற்கரையில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. மருத்துவ கழிவுப்பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், பொலித்தீன் போன்ற கழிவுப் பொருட்களே இவ்வாறு அதிகம் கரையொதுங்கி வருகின்றன. கரையொதுங்கியுள்ள கழிவுப் பொருட்களில் இந்திய முகவரி பொறிக்கப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது. இவ்வாறு கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் மீனவர்களிடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கடலில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் இவ்வாறு கரையொதுங்குகின்றனவா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.