மகாத்மா காந்தி புரம் - பூண்டுலோயாவில்

மகாத்மா காந்தி புரம் - பூண்டுலோயாவில்

by Staff Writer 12-08-2018 | 7:49 PM
இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் நுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மகாத்மா காந்தி புரம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி புரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 வீடுகளும் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் . இன்றைய நிகழ்வின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் ஊடாக உரையாற்றினார்.