உரிய நேரத்தில் பரீட்சைக்கு செல்லுமாறு கோரிக்கை

உரிய நேரத்தில் பரீட்சை நிலையங்களுங்கு செல்லுமாறு கோரிக்கை

by Staff Writer 12-08-2018 | 11:45 AM
Colombo (News 1st)

கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைய, உரிய நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கால அட்டவணையை மீறி பரீட்சார்த்திகள் சிலர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளமை குறித்து தகவல்கள் பதிவாகியுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக, இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.