102 ஆவது உதா கம்மான வீடமைப்புத் திட்டம் மன்னாரில் இன்று (05) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் - நானாட்டான் பிரதேத்திற்குட்பட்ட நறுவிளிக்குளம் லூர்துநகர் மாதிரி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 23 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ உரையாற்றுகையில்,
இன்று கையளிக்கப்பட்ட 23 வீடுகளுக்கும் நான் சென்றபோது மகிழ்ச்சியடைந்தேன். வீடுகளுக்கான சான்றிதழ்களை நானே வழங்கி வைத்தேன். ஆனால், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் விகாரைகளுக்கு சென்று வேறு ஒருவர் நிர்மாணித்த புத்தர் சிலைகளைத் திறந்து வைத்து விட்டு வௌியில் வந்து நாட்டினை பிளவுபடுத்தும் வகையில் தான் பேசுகின்றார்கள்.நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் போல தான் நடந்து கொள்வார்கள். ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க அவர்கள் பள்ளிவாசல்கள், கோயில்கள் நோக்கி செல்கின்றனர். கோயில்களுக்கு செல்வதற்கு போட்டி போடுகின்றனர். பொதுஜன பெரமுனவின் தந்திரமே இது. பௌத்த தர்மத்தை மதிக்காத இவர்கள் குறுக்கு வழியில் விரைவில் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கு இதனை செய்கின்றனர் .பேருவளை, அளுத்கம சம்பவத்தினை தோற்றுவித்தவர் வேறு யாரும் இல்லை முன்னாள் ஜனாதிபதியும் கடந்த அரசாங்கமும் தான் என்பதனை நான் எவ்வித பயம் இன்றி சொல்கின்றேன். இன, மத ரீதியில் சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.