மஹிந்தவிற்கு பதிலாக வருகை தந்த சமல்

மஹிந்தவிற்கு பதிலாக வருகை தந்த சமல்: எம்பிலிப்பிட்டியவில் அமைதியின்மை

by Staff Writer 28-07-2018 | 7:24 PM
Colombo (News 1st)  எம்பிலிப்பிட்டிய விகாரையில் இன்று (28) நடைபெறவிருந்த புண்ணிய நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகை தராமையால் அமைதியின்மை ஏற்பட்டது. எம்பிலிப்பிட்டிய - ஹீந்தழுக்கின்ன வனவாசல நாக விகாரையில் புத்த பெருமானின் சிலையை பிரதிஸ்டை செய்யும் புண்ணிய நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவிருந்தது. எனினும், இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக வருகை தரமாட்டார் எனவும், சமல் ராஜபக்ஸ வருகை தருவார் எனவும் விகாரதிபதி தெரிவித்தார். அதனையடுத்து, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர். இளைஞர்கள் இருவர் மரத்தில் ஏறி தமது எதிர்ப்பினை வௌியிட்டனர். அதன் பின்னர் சமல் ராஜபக்ஸ நிகழ்விற்கு வருகை தந்தார். இந்த நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சமல் ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தினார். எவ்வாறாயினும், புத்தபெருமானின் சிலை பிரதிஸ்டை செய்யப்படாத நிலையில் சமல் ராஜபக்ஸ திரும்பிச் சென்றார்.