by Staff Writer 08-07-2018 | 10:16 PM
நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதியேனும் தமக்கு கிடைக்கவில்லை என்பதே மலையக மக்களின் ஆதங்கமாகும்.
பல தசாப்தங்களுக்கு முன்னதாக நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொழிலாளர் தொடர் குடியிருப்புக்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இவர்களின் நாட்கள் நகர்கின்றன.
இந்தக் கூரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விறகுகளே கடும் காற்றிலிருந்து இவர்களின் கூரைத் தகடுகளை பாதுகாகிக்கின்றன.
அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் கௌரமாக வாழ்வதற்கு வழிசெய்யும் பொறுப்பு தாம் வாக்களித்த அரசியல்வாதிகளுக்கே உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.