நிர்வாகிகளால் எவ்வித திட்டமும் நிறைவேற்றப்படவில்லை

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளால் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: ரொஷான் மஹாநாம

by Bella Dalima 30-06-2018 | 9:39 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை தொடர்பில் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவரான ரொஷான் மஹாநாம கருத்து தெரிவித்தார்.
கிரிக்கெட்டிற்கு கட்டுப்பாட்டுச்சபை ஒன்று இல்லை. வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். எனினும், நிர்வாகிகளினால் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை
என ரொஷான் மஹாநாம தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஆலோசகராக இணையுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தமை தொடர்பிலும் ரொஷான் மஹாநாம கருத்துத் தெரிவித்தார்.
நாங்கள் முன்வருவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறு முன்வருவதற்கான ஒரு சூழல் எங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. தற்காலிகமாக நான் இணையமாட்டேன். கடந்த சில வருடங்களாக கதிரையில் அமர்ந்திருந்தவர்கள் யார் என்பதை அமைச்சர் உற்றுநோக்க வேண்டும். அவர்களால் கிரிக்கெட்டிற்கு என்ன சேவை கிடைத்தது என்பதையும் அமைச்சர் கவனிக்க வேண்டும்
என ரொஷான் மஹாநாம கூறினார்.