by Staff Writer 29-06-2018 | 4:46 PM
Colombo (News 1st) அடுத்த மாதத்தின் (ஜூலை) இறுதி வாரமளவில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடையக்கூடும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தைகளில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W. வீரகோன் குறிப்பிட்டார்.
மார்ச் மாதத்தில் நிலவிய வறட்சியால் விவசாயிகள், செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடாததால், போதுமானளவு மரக்கறிகள் சந்தைகளுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மரக்கறி வகைகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.