பொலிஸ் உயர் கதிரைகளில் மாற்றம்!

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு

by Staff Writer 24-06-2018 | 3:54 PM

(Colombo) News1st உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 37 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வு வழங்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்த 37 பேருக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான விசேட அறிவித்தலை வௌியிடுமாறு பொலிஸ்மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். அத்துடன், நீண்ட காலமாக ஒரே பதவியில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் நேர்முக பரீட்சை ஊடாக பதவி உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.