ICC-யின் விசாரணைகளுக்கு சமூகமளித்தார் சந்திமால்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசாரணைகளுக்கு சமூகமளித்தார் டினேஷ் சந்திமால்

by Bella Dalima 19-06-2018 | 9:24 PM
Colombo (News 1st)  மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தின் தன்மையை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை அணித்தலைவர் டினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசாரணைகளுக்கு இன்று சமூகமளித்தார். இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் டினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2, 2, 9 சரத்தை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பின்னர் போட்டி மத்தியஸ்தரான ஜவகல் ஶ்ரீநாத் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்திருந்தது. இந்தப் போட்டியில் நடுவர்களாக செயற்பட்ட அலீம் டார், இயன் கோல்ட் மற்றும் மூன்றாம் நடுவரான ரிச்சட் கெடல்பொரொவ் ஆகியோர் டினேஷ் சந்திமால் பந்தின் தன்மையை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவத்தில் டினேஷ் சந்திமாலும் அசங்க குருசிங்கவும் சட்டத்தரணி இன்றி குறித்த விசாரணைகளில் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.