மின்னஞ்சல் ஊடுருவல் ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு

மின்னஞ்சல் ஊடுருவல் ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு

by Bella Dalima 14-06-2018 | 4:39 PM
Colombo (News 1st) மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நிதி மோசடி குறித்து 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டார். இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 140 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், கடந்த வருடம் 15 முறைப்பாடுகள் மாத்திரமே பதிவாகியதாகவும் ரொஷான் சந்திரகுப்த சுட்டிக்காட்டினார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகளின் போதே அதிகளவில் நிதி மோசடி முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். முகர்வர்களாக செயற்படுவதாகக் கூறி நிதி வைப்பிலிடும் போது அவற்றை தமது சொந்த கணக்குகளுக்கு மாற்றிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். மின்னஞ்சல் ஊடுருவல் ஊடாக இந்த மோசடிகள் முன்னெடுக்கப்படுகின்றன.