by Bella Dalima 13-06-2018 | 4:52 PM
Colombo (News 1st) மன்னாரில் காணாமற்போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
இன்று முற்பகல் 10 மணியளவில் சடலங்கள் கரையொதுங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
மன்னார் - ஊருமலை பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர்.
அவர்களின் படகு நேற்று (12) கரையொதுங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்ரின் கூஞ்ஞ, எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரண்டு சகோதரர்களே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.