புறா தலையுடன் மீன்: சீனாவில் அதிசயம்

புறா தலையுடன் மீன்: சீனாவில் அதிசயம்

by Bella Dalima 13-06-2018 | 5:35 PM
சீனாவில் புறா தலையுடன் மீன் ஒன்று பிடிபட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் குயிஷோயி மாகாணத்தில் உள்ள குயாங் பகுதி மீனவர் ஒருவரின் வலையில் புறா போன்ற தலை கொண்ட அதிசய மீன் கடந்த வாரம் சிக்கியுள்ளது. இதைக்கண்ட அவர் உடனடியாக ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த மக்கள் விசித்திர மீனைப் பார்க்க பெருமளவில் திரண்டுள்ளனர். இந்த வகை விசித்திர மீனை இதுவரைக் கண்டிராத அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து தத்தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். ''கிராஸ் கார்ப்'' என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது பெரும்பாலும் காணப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.