தீபிகா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ

தீபிகா படுகோன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

by Bella Dalima 13-06-2018 | 5:18 PM
மும்பை - வொர்லி பகுதியிலுள்ள Beau Monde Towers எனும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ பரவியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் 33 ஆவது தளத்தில் இருந்து தீ பரவியுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட பி-பிரிவில் (B-Wing) 26 ஆவது தளத்தில் தான் பொலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வருகிறார். தீ விபத்தின் போது பணியாளர்கள் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர். தீபிகா படப்பிடிப்பிற்காக வௌியே சென்றுள்ளார். எவ்வாறாயினும், அவரது வீட்டிற்கு எவ்வித பாதிப்பும் எற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.