பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல்

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Bella Dalima 12-06-2018 | 4:02 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம் நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யசோத ரங்கே பண்டார கடந்த 8 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டார். அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை , விபத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி, புத்தளம் - ஆராச்சிக்கட்டு பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.