by Bella Dalima 12-06-2018 | 4:13 PM
Colombo (News 1st) தாக்குதலுக்கு இலக்கான கம்பளை - உடபலாத பிரதேச சபைத் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவர்கள் இருவருக்கிடையிலும் மோதல் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இருவர் தரப்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.