கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விசித்திர சம்பவம்

கொள்ளுப்பிட்டியில் ஒருவரை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மாடிக்குடியிருப்பிலிருந்து கீழே குதித்துள்ளார்

by Staff Writer 10-06-2018 | 5:53 PM

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில்,சந்தேகநபர் மாடிக்குடியிருப்பிலிருந்து கீழே குதித்து தப்பிக்க முற்பட்டுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதி பகுதியில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மாடியிலிருந்து கீழே குதித்ததால், சந்தேகநபரின் கால் முறிவடைந்துள்ளது. இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.