பேர்பச்சுவல் ட்ரஷரிஸிடம் பணம் பெற்ற 118பேர் யார்?

பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றதை ஏற்றுக் கொள்பவர்கள் யார் ?

by Staff Writer 03-06-2018 | 9:15 PM

பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றதாக முள்ளான் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் சரத் பொன்சேகா ஆகியோர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளனர்.

அமைச்சர், பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கின்ற அர்ஜூன ரணதுங்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, பாட்டலி சம்பிக்க, ரஞ்சன் ராமநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, இரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.எம் மரிக்கார், நலின் பண்டார, விஜேதாச ராஜபக்ஸ, ஶ்ரீயானி விஜயவிக்ரம, பாலித தெவரப்பெரும, அநோமா கமகே, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, காமினி லொக்குகே, உதய கம்மன்பில, பாலித ரங்கே பண்டார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் குறித்த நிறுவனத்திடம் தாம் பணம் பெறவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளனர். எனினும், தினேஷ் குணவர்தன மற்றும் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் நேரடிப் பதிலை வழங்கவில்லை. பேர்பச்சுவல் ட்ரஷரிஸிடம் பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒப்புக்கொண்டவர்கள் - 02/225 நிராகரித்தவர்கள் - 26/225 நேரடி பதில் வழங்காதவர்கள் - 02/225