ரோஹித்த அபேகுணவர்தன மீதான வழக்கு ஒத்திவைப்பு

ரோஹித்த அபேகுணவர்தன மீதான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 28-05-2018 | 5:54 PM

Colombo (News 1st)  - பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ உத்தரவிட்டுள்ளார்.

ரோஹித்த அபேகுணவர்தன அமைச்சராக பதவி வகித்த இரண்டு வருடங்கள் மூன்று மாதங்கள் காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக 412 லட்சம் ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளராக உள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக அவர் இன்று மன்றில் ஆஜராக தவறிய நிலையில், அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றுக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார். அதன் பிறகு பிரதம நீதவானினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது