சீரற்ற வானிலையினால் 24 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

by Staff Writer 28-05-2018 | 9:39 PM

Colombo (News 1st) - சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாடுமுழுவதிலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 43,604 குடும்பங்களைச் சேர்ந்த 01,66,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 265 முகாம்களில் 17,0976பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 121வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 5,205 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 166 விற்பனை நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.